ராஜஸ்தானில் தீவிரமடையும் தேர்தல் பணிகள்..!  லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறையினர் கைது..!

ராஜஸ்தானில் தீவிரமடையும் தேர்தல் பணிகள்..! லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறையினர் கைது..!

Published on

ராஜஸ்தானில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவம்பர் 23ம் தேதி ராஜஸ்தானில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நிய செலவாணி விதிகளை மீறியதாக முதலமைச்சர் அசோக் கெலாட் மகனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் சிட்ஃபண்ட் வழக்கு விவகாரம் தொடர்பாக 15 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக, இரு அதிகாரிகளை ராஜஸ்தான் ஊழல் தடுப்புப் பணியகம் கைது செய்துள்ளது.

தொடர்ந்து முக்கிய அதிகாரிகளின் வீட்டில் சோதனை நடைத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com