இந்திய தூதரகத்தின் மேல் ட்ரோன் பறந்த விவகாரம்... பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்...

இந்திய தூதரகத்தின் மேல் ட்ரோன் பறந்த விவகாரம்... பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்...

இந்திய தூதரகத்தின் மீது ட்ரோன் பறந்ததற்கு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்
Published on
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வளாகத்தில் விதிமுறைகளை மீறி ட்ரோன் பறக்கவிடப்பட்டதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து ஜம்முவின் ட்ரோன்கள் பறப்பது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வளாகத்தில் விதிமுறைகளை மீறி அந்நாட்டுக்கு சொந்தமான ட்ரோன் பறந்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியுறத்துறை அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் விசாரணை நடத்த வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com