மின் தேவையை ஈடுகட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை.!!

மின் தேவையை ஈடுகட்ட, 10 சதவீதம் நிலக்கரியை இறக்குமதி செய்யும்படி மாநிலங்களுக்கு மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மின் தேவையை ஈடுகட்ட  மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை.!!
Published on
Updated on
1 min read

கொரோனாவுக்கு பின் நாட்டில் பொருளாதாரம் மீண்டு வருவதால், மின்சார தேவை அதிகரித்துள்ளது. பல மாநிலங்கள் நிலக்கரி தட்டுப்பாடால்,  மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசிடம் கவலை தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாத அளவுக்கு நிலக்கரி விலை உயர்ந்துள்ளது. இதனால் சில அனல்மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனிடையே நேற்று அனல்மின் நிலையங்களை ஆய்வு செய்த பிரதமர் அலுவலகம், மின்சார மற்றும் நிலக்கரி அமைச்சக அதிகாரிகளுடன் அதுகுறித்து ஆலோசனை நடத்தியது.

அதைத்தொடர்ந்து தினசரி நிலக்கரி உற்பத்தியும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், அனல்மின் நிலையங்கள் 10 சதவீதம் நிலக்கரியை இறக்குமதி செய்து, உள்ளூர் நிலக்கரியுடன் கலந்து பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com