கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...தாழ்வான பகுதிகளில் தத்தளிக்கும் மக்கள் !

கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...தாழ்வான பகுதிகளில் தத்தளிக்கும் மக்கள் !

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏனாம் பிராந்தியத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியான ஏனாம் பிராந்தியம் ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றங்கரை பகுதியில் உள்ளது, ஆந்திரா, தெலுங்கான மற்றும் மஹாராடிராவில் கன மழை பெய்தால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏனாம் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளான டவுலேஸ்வரம், பாலயோகி நகர், குரு கிருஷ்ணாபுரம்,பிரான்ஸ்டிப்பா உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது, மேலும் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்:

இந்நிலையில் கோதாவரி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது வரை 15 லட்சத்து 57 ஆயிரம் கன அடி தண்ணீர் கோதாவரி ஆற்றில் வந்து கொண்டிருப்பதாகவும், இது மேலும் அதிகரிக்கும் என்பதால் கரையோரங்களில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்கள் அல்லது அரசின் முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை:

இதனிடையே ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாளைய தினம் ஏனாமில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் வெள்ள நீர் சூழ்ந்திருக்கக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்கும் பணியில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர், 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com