நிறமிழந்த கூகுள் லோகோ!!! இது தான் காரணமா?

கூகுள் நிறுவனம் தனது லோகோவில் உள்ள அனைத்து நிறங்களையும் நீக்கி சாம்பல் நிறத்திற்கு மாற்ற காரணம் என்ன என்பதை பார்க்கலாம்!!!
நிறமிழந்த கூகுள் லோகோ!!! இது தான் காரணமா?
Published on
Updated on
1 min read

மிகவும் பிரகாசமான கண்ணைப் பறிக்கும் சிறப்பான நிறங்கள் நிரைந்த கூகுள் லோகோவை தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்று அந்த பிரகாசத்தை இழந்துள்ளது அந்த லோகோ. அதற்கு காரணம் இருக்கிறது. பிரிடிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் இறந்ததை ஒட்டி, கூகுள் நிறுவனம் தனது இரங்கலை இந்த விதத்தில் தெரியப்படுத்தியுள்ளது.

பிரிடிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் இறந்ததால், அவர்களை நினைவு கூரும் வகையிலும், அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் கூகுள் நிறுவனம் இப்படி செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் சி.ஈ.ஓ சுந்தர் பிச்சை, தனது ட்விட்டர் பக்கத்தில், தனது கருத்துகளையும் இது குறித்து பதிவிட்டிருக்கிறார்.

அதில், “இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறவால் வருத்தத்தில் இருக்கும், இங்கிலாந்து மற்றும் உலக மக்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உறுதியான தலைமைத்துவமும், பொதுச் சேவையும் நம் வாழ்வில் பலவிதத்தில் நிலைத்திருக்கும். அவர் இல்லாதது வருத்தமளிக்கிறது” என பதிட்டிருந்தார்.

இந்த பதிவை ஒட்டி, பலரும், தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக, ராஜ்ஜியத்தை ஆண்டு வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தற்போது இறந்த உடன், அவரது மகன் மூன்றாம் சார்லஸ் தற்போது மகுடம் சூடியிருக்கிறார். அவரது மறைவுக்கு, உலக மக்கள் பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவும், மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு, ஒரு நாள் அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நாள் மாநிலந்தழுவிய இரங்கல் தெரிவிக்கவும், செங்கோட்டை, ராஷ்டிரபதிபவன் உட்பட அனைத்து அரசு கட்டிடங்களிலும் உள்ள தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்க விடும் படியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கூகுளின் இந்த செயல், பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com