கா்நாடகாவின் தண்ணீா் தேவையை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தெளிவுப்படுத்த கா்நாடக அரசு தவறிவிட்டதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சா் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.
கேஆர்எஸ் அணையை பார்வையிட்ட பின்னர் செய்தியாளா்களை சந்தித்து பேசிய அவர், காவிரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் காவிரி பகுதி விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தொிவித்தாா்.
மேலும் விவசாயிகள் குடிநீருக்காக கடும் பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், கா்நாடகாவின் தண்ணீா் தேவையை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தெளிவுப்படுத்த அரசு தவறிவிட்டது என்றாா்.