உலக விண்வெளி வார விழா ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்!

இந்தியா விண்வெளியில் செய்துள்ள சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் இந்த  நிகழ்வு  நடத்தப்படுகிறது.

உலக விண்வெளி வார விழா ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்!

காரைக்காலில்  இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டா  சதீஷ் தாவான்  விண்வெளி மையம்  மூலமாக உலக விண்வெளி வார விழா - 2022,  இன்று முதல் அக்டோபர் 9 வரை நடைபெறவுள்ளது. 

தொடக்க நிகழ்வு 

இதற்கான தொடக்க நிகழ்வு இன்று   காரைக்கால் பைபாஸ் அருகில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தொடர்ந்து  துணைநிலை ஆளுநர் அறிவியல், விண்வெளி சார்ந்த  கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் பள்ளி  கல்லூரி மாணவர்களின்   விண்வெளி,  அறிவியல் சார்ந்த காட்சிப் பொருட்கள் இடம் பெற்றது.  

விண்வெளி சாதனைகள் 

இந்தியா விண்வெளியில் செய்துள்ள சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் இந்த  நிகழ்வு  நடத்தப்படுகிறது.   நிறைவு விழா அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்கிறார். இதில்  ஸ்ரீஹரிகோட்டா  சதீஷ் தாவான்  விண்வெளி மையம்  இயக்குனர்  விஞ்ஞானி இராஜராஜன் , விண்வெளி வார விழா - தலைவர் செந்தில்குமார்,புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர்  சந்திர பிரியங்கா,  சட்டமன்ற உறுப்பினர்  ஏ.எம்.எச்.நாஜிம், மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். 

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியை இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தாவான் விண்வெளி மையத்துடன ஆகியவற்றுடன் இணைந்து  மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.