உக்ரைனுக்கு உதவுங்கள்.... கோரிக்கை வைத்த போரிஸ்!!!

உக்ரைனுக்கு உதவுங்கள்.... கோரிக்கை வைத்த போரிஸ்!!!

உலகத் தலைவர்கள் உக்ரைனுக்கு அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளை ஏற்படுத்தி தர வேண்டுமென இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். 

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தொடங்கி ஓராண்டை நெருங்க உள்ள நிலையில் பல்வேறு நாட்டினர் தேவையான உதவிகளை செய்து வருகின்றன.  இந்நிலையில் அமெரிக்கா நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள அட்லாண்டிக் கவுன்சிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போரிஸ் ஜான்சன் உலக நாடுகள் உக்ரைனுக்கு சில புதிய வகை ஆயுதங்களை அனுப்புவதில் தாமதத்தை ஏற்படுத்தாமல் விரைவில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   பட்ஜெட்2023: ஒரு பார்வை!!

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com