புதிய நாடாளுமன்றத்தில் தேசிய கொடி ஏற்றம்!

புதிய நாடாளுமன்றத்தில் தேசிய கொடி ஏற்றம்!

நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. 

அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் நாளை முதல் சிறப்பு கூட்டம் தொடங்கப்பட உள்ளது. 5 நாடகள் நடக்க இருக்கும் இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.  இந்நிலையில் இன்று காலை புதிய நாடாளுமன்றமான கஜ் துவாரில் குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை  தலைவருமான ஜக்தீப் தங்கர் தேசியக் கொடியை ஏற்றினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என்றும் சகாப்த மாற்றத்தை பாரதம் கண்டு வருகிறது என்றும் கூறினார். மேலும் பாரதத்தின் வலிமை மற்றும் பங்களிப்பை உலகம் முழுவதுமாக அங்கீகரித்துள்ளதாக ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com