பற்றாக்குறையை சந்திக்கவுள்ள இந்தியா... எச்சரித்த ஐ.நா.!!

பற்றாக்குறையை சந்திக்கவுள்ள இந்தியா... எச்சரித்த ஐ.நா.!!

2050ம் ஆண்டுக்குள் இந்தியா, கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஐநா வெளியிட்டுள்ள நீர் மேம்பாட்டு அறிக்கையின்படி, தண்ணீர் பற்றாக்குறையுடன் வாழ்வோரில் 80 சதவீதம் பேர் ஆசியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் இந்தியா, பாகிஸ்தான், வடகிழக்கு சீனா உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் உலகளாவிய நகர்ப்புற மக்கள்தொகையின் எண்ணிக்கை, 2 புள்ளி 4 பில்லியன் வரை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனுடன் 2050ம் ஆண்டுக்குள் இந்தியா உட்பட பல ஆசியா நாடுகள் கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com