டிஜிட்டல் பண பரிவர்த்தனை: உலகத் தரவரிசையில் இந்தியா முதலிடம்..! 

டிஜிட்டல் பண பரிவர்த்தனை:   உலகத் தரவரிசையில் இந்தியா முதலிடம்..! 

உலக அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:- 

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் எட்டு கோடியே 95 லட்சம் பேர் என்ற அளவில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகத் தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த பட்டியலில்   29.2 மில்லியன் பரிவர்த்தனைகள் என்ற கணக்கில் பிரேசில் 2 ஆவது இடத்தையும், 17.6 மில்லியன் பரிவர்த்தனைகளுடன் சீனா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. மேலும், 
4வது இடத்தில் தாய்லாந்து 16.5 மில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுடன் உள்ளது, அதைத் தொடர்ந்து தென் கொரியா 8 மில்லியன் மதிப்புள்ள பரிவர்த்தனைகளுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

காகிதமில்லா பணபரிமாற்ற முறையை மக்களிடையே பிரபலப்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது,  இந்தியா முதலிடத்தில் உள்ளது.

மேலும்,  இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி,  "டிஜிட்டல் பணம் செலுத்துவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மொபைல் டேட்டா மலிவான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இன்று, நாட்டின் கிராமப்புற பொருளாதாரம் மாறி வருகிறது" என்று  கூறினார்.

தொடர்ந்து, டிஜிட்டல் கொடுப்பனவுகளில், இந்தியா புதிய மைல்கற்களை கண்டு வருகிறது, மதிப்பு மற்றும் அளவு ஆகிய இரண்டிலும், இது இந்தியாவின் கட்டண சூழலின் வலுவான தன்மையையும் ஏற்றுக்கொள்ளலையும் குறிக்கிறது என்று RBI நிபுணர்கள் கூறுகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com