ஒரு கோடியே 33 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தி இந்தியா புதிய சாதனை...

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு கோடியே 33 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தி இந்தியா புதிய சாதனை...

ஒரேநாளில் 33 ஆயிரத்து 964 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 93 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் தீவிர தொற்று காரணமாக  460 பேர் பலியானதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா உறுதியாகிருப்பதாகவும், இதனால் தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 3 லட்சத்து 78 ஆயிரத்து 181 ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுவரை 65 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 508 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கோடியே 33 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com