இந்தியாவுக்கு 100 பில்லியனா? அப்போ நம்ம கடன் மொத்தமா தீந்துடுமா?

இந்தாண்டு இறுதிக்குள், இந்தியாவிற்கு உலக வங்கி பத்தாயிரம் கோடி அனுப்ப உள்ளதாக உலக வங்கியில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு 100 பில்லியனா? அப்போ நம்ம கடன் மொத்தமா தீந்துடுமா?
Published on
Updated on
1 min read

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொள்ள பல பட்டதாரிகள் வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள வேலைகள் செய்து தங்களது வீடுகளுக்கு பணமனுப்பி வருகின்றனர். வளரும் நாடான இந்தியாவில் இருந்து பணக்கார நாடுகளாகக் கூறப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வேலை செய்து வரும், திறம் வாய்ந்த இந்தியர்கள், தங்களது வீடுகளுக்கு, மாதாந்திர கணக்கிலோ, அல்லது வருடாந்திர கணக்கிலோ தங்களது வீடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

இவர்களோடு, மற்ற நாடுகளிலும் இந்தியர்கள் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர்கள் இந்தியாவிற்கு பணமனுப்பும் அளவு தற்போது முன்பை விட அதிகரித்துள்ளதாக உலக வங்கி தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 2021ம் ஆண்டு பணம் அனுப்பும் விகிதம் 36 சதவீதமாக அதிகரித்த நிலையில், இந்தாண்டு 12 சதவீதம் கூடுதலாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவு இந்தாண்டு அதிகமாக இந்தியப் புலம்பெயர்ந்தோர் தம் நாடுகளுக்கு பணம் அனுப்பியதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. 

இதன் மூலம், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் 2022ம் ஆண்டு இறுதிக்குள் உலகளவில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியாவுக்கு அனுப்ப வாய்ப்புள்ளதாக உலக வங்கி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இப்படியாக அனைத்து பணங்களும் சரிவர இந்தியாவிற்கு வந்தடைந்தால், இந்தாண்டிலேயே இந்தியாவின் கடன்கள் அனைத்தும் அடைக்கப்படும் என ஒரு சிலர் இது குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com