வாக்கு எந்திரங்களில் குளறுபடியா... எதிர்க்கட்சிகள் ஆலோசனை!!

வாக்கு எந்திரங்களில் குளறுபடியா... எதிர்க்கட்சிகள் ஆலோசனை!!

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எதிா்க்கட்சி தலைவா்களுடன்  இன்று ஆலோசனை நடத்தவுள்ளாா். 

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது.  அதில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது தடவையாக ஆட்சியை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.  அதே சமயத்தில், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எதிா்கட்சி தலைவா்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளாா்.  இதில் பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com