எஸ் 400 ரக ஏவுகணை அமைப்பை இந்தியாவில் தயாரிக்கும் பொருட்டு ஏவுகணையில் சில அமைப்புகளை ரஷ்யா இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் எஸ் 400 ரக ஏவுகணை அமைப்பின் எஞ்சின்கள் மற்றும் உதிரிபாகங்களை இந்தியாவுக்கு அனுப்புவதில் கால தாமதம் ஏற்படும் என்றும், இதன் விநியோகம் ஜுன் மாதம் மேற்கொள்ளப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையேயான போரால் இந்தியாவுக்கு எஸ் 400 ரக ஏவுகணை அமைப்பை ரஷ்யா வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்றும் திட்டமிட்டபடி எஸ் 400 ஏவுகணை அமைப்பு இந்தியாவுக்கு டெலிவரி செய்யப்படும் என ரஷ்யா தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது டெலிவரியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.