தேசிய கொடியை உருவாக்கும் ஜெயில் கைதிகள்!

வருகிற சுதந்திர தினத்தை ஒட்டி, ‘ஹர் கர் திரங்கா’ என்ற பிரச்சாரத்திற்காக, மீரட்டில் உள்ள சிறை கைதிகள், தேசிய கொடிகளை தைத்து வருகின்றனர்.
தேசிய கொடியை உருவாக்கும் ஜெயில் கைதிகள்!
Published on
Updated on
1 min read

75வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் இந்தியா, பல வகையில், கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து, ஆகஸ்டு 13 முதல் 15ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு பொது மக்கள் உட்பட அனைவரும், தங்களது வீடுகளில், நமது தேசிய கொடியை பறக்க விட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மக்களின் பங்கேற்பை அதிகரிக்க, கடந்த ஜூலை 22ம் தேதி, பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரத்திற்கு, ‘ஹர் கர் திரங்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக சட்டத் திருத்தங்களும் கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வகையில், சாமானியக் குடிமகனும் தேசியக் கொடியை, தங்களது வீட்டு மாடிகளில் மூன்று நாட்களுக்கு பறக்க விடலாம் என்றும், இரவு பகல் என 24 மணி நேரத்திற்கு பறக்க விடலாம் என்றும், 2002ம் ஆண்டின் இந்திய தேசியக்கொடிக் குறித்த சட்டம் திருத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மீரட்டில் உள்ள சிறை கைதிகள், தேசிய கொடிகளைத் தைத்து வருகின்றனர். இது, ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவிற்காக, மீரட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து முதன்மை வளர்ச்சி அதிகாரி ஷஷாங்க் சவுத்ரியின் வழிகாட்டுதலின் பேரில் செய்யப்படுகிறது.

இது குறித்து சிறை கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் கூறுகையில், “30 ஆண் கைதிகளும், 10 பெண் கைதிகளும் தொடர்ந்து திரங்கா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 39 முகாம்கள் உள்ளன. ஒவ்வொரு படைமுகாமிலும் தேசியக் கொடி ஏற்றப்படும். ஹர் கர் திரங்கா பிரச்சாரம் மீரட் மாவட்டச் சிறையில் கண்டிப்பாக பின்பற்றப்படும்.” எனக் கூறினார்.

இந்த சிறையில் உள்ள அனைத்து கைதிகளும், அதிகாரிகளும், கொடியேற்றுவர் என்றும், பார்வையாளர்களுக்கும் மூவர்ணக் கொடி கொடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் மோடியால் துவங்கி வைக்கப்பட்ட இந்த பிரச்சாரம் சிறப்பாக நடக்க, மாநிலம், யூனியன் பிரதேசம் மற்றும் அமைச்சகங்கள் கடுமையாக செயல்பட்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com