மத்திய அரசு திட்டத்திற்கு கர்நாடகா எதிர்ப்பு?

மத்திய அரசு திட்டத்திற்கு கர்நாடகா  எதிர்ப்பு?

மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகில் 20,668 சதுர  கிலோமீட்டர்  பகுதியை பாதுகாக்கப்பட்ட  சுற்றுச்சூழல் பகுதியாக மத்திய அரசு அறிவித்ததை எதிர்த்து போராட போவதாக கர்நாடக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சகம் அறிக்கை:

சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் வெளியிட்ட அறிக்கையில் மேற்கு தொடர்ச்சி மலையின் 46,832 சதுர கிலோமீட்டர் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட இப்பகுதி ஒன்பது மாநிலங்களை உள்ளடக்கியதாகும்.  இதில் கர்நாடக மாநிலத்தின் பெரும்பகுதி அடங்கியுள்ளதாக தெரிகிறது.  இதைக் குறித்து ஆட்சேபனை இருப்பின் மூன்று மாதத்திற்குள் தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சுவாமிநாதன் குழு மற்றும் கஸ்துரி ரங்கன் அறிக்கை அடிப்படையில் இப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  வனப்பகுதியை பாதுகாப்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக முதலமைச்சர் எதிர்ப்பு:

மத்திய அரசின் இம்முடிவை எதிர்த்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடகாவின் எம்.எல்.ஏக்கள் எம். பிக்கள் கலந்து கொண்டனர். அதில் பேசும்போது   மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகில் பெரும்பான்மையான பகுதி கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் இதனால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும்  பாதிக்கப்படட ஒன்பது மாநிலங்களின் ஒத்துழைப்பையும் கோர வேண்டும் என்றும், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்வோம் எனவும் முடிவெடுத்துள்ளனர்.

மத்திய அரசு பதில்:

கர்நாடக முதலமைச்சருக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மத்திய அரசின் செய்தி தொடர்பாளர் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வசங்கப்பட்டுள்ளது எனவும், குறைகளை மத்திய அரசிடம் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.  மேலும் கர்நாடக முதலமைச்சர் வாக்கிற்காக இவ்வாறு கூவுவதாகவும் கூறியுள்ளார்.

ஜூலை 6 அன்று அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இவ்வறிக்கை கஸ்தூரி ரங்கன் அறிக்கை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட்து.  பல சமூக ஆர்வலர்களால் இதன் மேல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.  இதற்கு முன்னதாக 2014, 2015, 2017, 2018 ஆகிய ஆண்டுகளிலும் கருத்துக்களைக் கேட்டு வரைவு வெளியிட்டது.   மக்களிடம் கருத்து கணிப்பு கேட்டறிந்த பிறகே அறிக்கை வெளியிடப்பட்ட்து இங்கு கவனிக்கத்தக்கது.