'ராகுல் வீடியோவில் கேஜிஎஃப் பாடல்' வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

'ராகுல் வீடியோவில் கேஜிஎஃப் பாடல்' வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!
Published on
Updated on
1 min read

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தின் போது கேஜிஎஃப் பட பாடலின் பதிப்புரிமை மீறப்பட்டதாக காங்கிரஸ் தலைவா்கள் மீது பதியப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்ய கா்நாடக உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது. 

சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா ராகுல்காந்தி தேசிய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டார். இதில் கர்நாடகாவில் அவர் நடைபயணம் மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோவில் கேஜிஎப் திரைப்படத்தில் வரும் டூபான் என்ற பாடலை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்டு காங்கிரஸின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட பட்டுள்ளது. 

இந்நிலையில் கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் இந்தி வெர்ஷன் பாடல்களுக்கான பதிப்புரிமையை பெற்றிருக்கும் எம்.ஆர்.டி மியூசிக் என்ற நிறுவனம் காங்கிரஸ் கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதனை தொடர்ந்து கேஜிஎஃப் பட பாடலின் பதிப்புரிமை மீறப்பட்டதாக ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சுப்ரியா ஸ்ரீனேட் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

அவ்வழக்கை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com