இந்திய ஒற்றுமை பயணத்தில் 3 வது நாள்...நாகர்கோவிலில் இருந்து தக்கலை நோக்கி ராகுல் பயணம்...!

இந்திய ஒற்றுமை பயணத்தில் 3 வது நாள்...நாகர்கோவிலில் இருந்து தக்கலை நோக்கி ராகுல் பயணம்...!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணத்தை தொடங்கியுள்ள ராகுல்காந்தி, இன்று 3வது நாளாக அகஸ்தீஸ்வரத்திலிருந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

இந்தியா ஒற்றுமை பயணம்:

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி கடந்த 7ம் தேதி தொடங்கினார். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 118 பேர் உட்பட 300 பேர் கலந்து கொண்டுள்ளனர். 

ஆதரவு திரட்டும் ராகுல்:

இந்தநிலையில் இன்று 3வது நாளாக நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியிலிருந்து ராகுல் காந்தி தனது பயணத்தை தொடங்கி உள்ளார். அங்கிருந்து தக்கலை நோக்கி செல்லும் அவர் வழிநெடுகிலும் தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். 

முன்னதாக நேற்றைய நடைபயணத்தில் ஒரு பகுதியாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,  இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.கவால் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதாக குற்றம்சாட்டினார். மதத்தின் மூலம், மொழியின் மூலம் பிளவுப்படுத்தலாம் என்று பாஜக நினைப்பதாகவும் சாடினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com