தீபாவளிக்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...!

தீபாவளிக்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...!
Published on
Updated on
1 min read

புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ஆன்லைன் ரம்மி தடை செய்ய கோப்புகள் தயார் செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஏனாம் பகுதிகளில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் சூதாட்ட கிளப்புகளை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும்  தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், புதுச்சேரியில் உள்ள பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகளாக தரம் உயர்தப்பட உள்ளதால் தனி கல்வி வாரியம் அமைக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக கூறியவர், வருகிற 24 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளான 25 ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com