நேதாஜியை போல மீண்டும் ஒருமுறை டெல்லிக்கு செல்வோம்... அழைத்த மமதா பானர்ஜி...!!!

நேதாஜியை போல மீண்டும் ஒருமுறை டெல்லிக்கு செல்வோம்... அழைத்த மமதா பானர்ஜி...!!!

மேற்கு வங்கத்தில் ராமநவமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கலவரம் மம்தா அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முந்தைய தினம் இந்தியாவெங்கும் ராமநவமி கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் பெரும்பாலான நகரங்களில் இதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. இதில் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நடந்த ராமநவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள கடைகள் சூறையாடப்பட்டன; கலவரத்தை அடக்க வந்த காவல்துறையினரும் தாக்கப்பட்டு வாகனங்கள் தீவைக்கப்பட்டன.

இச்சம்பவத்திற்கு மேற்குவங்கத்தில் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியினரும், மத்திய அமைச்சர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸிடம் தொலைபேசியில் இச்சம்பவம் குறித்து கந்துரையாடல் நடத்தியள்ளார். அதேநேரத்தில் பாஜக வெளியில் இருந்து குண்டர்களை அழைத்துவந்து இதுபோன்ற ஊர்வலங்களை நடத்துவதாக  மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. ஆனால் இதுவரை இம்முகாமில் தன்னை சேர்த்துக்கொள்ளாத திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பேனர்ஜி தற்போது "அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று படவேண்டும்" என கருத்து தெரிவித்துவருகிறார். பாஜகவை வீழ்த்த "நேதாஜியை போல மீண்டும் ஒருமுறை டெல்லிக்கு செல்வோம்" என்ற பெயரில் டெல்லியை நோக்கி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளார். மம்தா பேனர்ஜி எதிர்கட்சி முகாமை நோக்கி நெருங்கி வந்துள்ள சூழலில் ராமநவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டது மேலும் மம்தா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com