வருகின்ற 5-ம் தேதி மதுபானக் கடைகள் மூடல்...

புதுச்சேரியில் வரும் 5-ம் தேதி அனைத்து மதுப்பானக் கடைகளும் மூடப்படும் என அம்மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 5-ம் தேதி மதுபானக் கடைகள் மூடல்...

புதுச்சேரி பகுதியில் வரும் 05.02.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று வள்ளலார் ஜோதி தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி அரசு, கலால் துறை ஆணையரின் ஆணைப்படி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அனைத்து மதுபான கடைகளும் முடப்பட உள்ளன.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டுமென்றும், அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என கலால்துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அன்றைய தினம் தடையை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970-68T கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com