கைது செய்யப்பட்டார் மம்தா தளபதி....சிக்கலில் தவிக்கும் மம்தா தளபதிகள்...

கைது செய்யப்பட்டார் மம்தா தளபதி....சிக்கலில் தவிக்கும் மம்தா தளபதிகள்...

மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், குரூப்-சி மற்றும் டி பணியாளர்கள் நியமனம் மற்றும் அரசு  உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த ஊழலில் பணப் பரிமாற்றம் தொடர்பானவற்றை அமலாக்க துறை கண்காணித்து வருகிறது.

பார்த்தா சாட்டர்ஜி கைது:

ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் 11 மணிநேர விசாரணைக்கு பின் கைது செய்துள்ளனர்.  இந்த ஊழல் நடந்தபோது சாட்டர்ஜி மாநில கல்வி அமைச்சராக இருந்தார்

ஏஜென்சி அதிகாரிகள் நேற்று காலை 8 மணிக்கு அமைச்சரின் வீட்டில் விசாரணையைத் தொடங்கினர்.

கொல்கத்தாவில் உள்ள சாட்டர்ஜியின் நெருங்கிய நண்பர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து 20 கோடி ரூபாயை அமலாக்க துறை அதிகாரிகள் மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ரூ.20 கோடி கைப்பற்றிய அமலாக்கத்துறை:


மேற்கு வங்க மாநிலத்தில் அமலாக்க துறையால் நேற்று இரண்டு அமைச்சர்கள் உள்பட 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 20 கோடி ரூபாய் தொகையை அமலாக்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  
 
மம்தா அமைச்சர்களுக்கு சிக்கல்:


மேற்கு வங்காளத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அமைச்சர் பரேஷ் அதிகாரி,  மேற்கு வங்க மாநிலத்தின் பள்ளி சேவை ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் சாந்தி பிரசாத் சின்ஹா, மேற்கு வங்க மாநிலத்தின் இடைநிலைக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் கல்யாண்மோய் கங்குலி உள்பட 12 பேரின் வீடுகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


11 மணி நேரம் நீண்ட விசாரணை: 


மேற்கு வங்கத்தின் முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் இல்லத்தில் ஆசிரியர் நியமனம் முறைகேடு தொடர்பான சோதனை 11 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதனையடுத்து, அவரிடம், சிபிஐஅதிகாரிகள்  விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆசிரியர் ஆட்சேர்ப்பில் முறைகேடு:


மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், குரூப்-சி மற்றும் டி பணியாளர்கள் நியமனம் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரித்து வருகிறது. இந்த ஊழலில் பணப் பரிமாற்றத்தை அமலாக்க துறை கண்காணித்து வருகிறது. ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறைகேடு தொடர்பாக கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.