பா.ஜ.க.வை வீழ்த்த ஒரே வழி... எதிர்கட்சி கூட்டத்தில் மம்தா யோசனை...

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க உறுதியான கூட்டணியை உருவாக்க குழுஒன்றை அமைக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி யோசனை தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வை வீழ்த்த ஒரே வழி... எதிர்கட்சி கூட்டத்தில் மம்தா யோசனை...

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்கட்சிகளில் ஆலோசனை கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய மம்தா, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க உறுதியான கூட்டணியை உருவாக்குவது அவசியம் என்றும் அதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் யோசனை வழங்கினார். மேலும் அக்குழுவுக்கு பிரதேன தேசிய கட்சியான காங்கிரஸ் தலைவர் சோனியா அல்லது ராகுல் தலைமையேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com