டிப்பர் லாரியில் மோதி நூலளவில் உயிர் தப்பிய நபர்...

டிப்பர் லாரி மோதி லாரியின் அடியில் சிக்கியும் அதிர்ஷ்டவசமாக சிறு சிறு காயங்களுடன் உயர்த்தப்பிய சைக்கிள் ஓட்டியின் அதிர வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
டிப்பர் லாரியில் மோதி நூலளவில் உயிர் தப்பிய நபர்...

கேரளா | கொல்லம் மாவட்டத்திலுள்ள கொட்டாரக்கரை சாலையில் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அதே நேரத்தில் சரக்கு ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று சைக்கிள் ஓட்டியை பார்த்ததும் திடீரென வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார்.இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சைக்கிள் ஓட்டின் மீது மோதி -அருகில் உள்ள கடையில் இடித்து நின்றது.

சைக்கிள் ஓட்டி வந்த நபர் லாரி  மோதி தூக்கி வீசப்பட்டு லாரிக்கு அடியிலும் ,கடையின் சுவர்களுக்கு இடையே மாட்டிக்கொண்டாலும் சிறுசிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்தின் CCTV காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com