முதல் முறையாக ஒரே சமயத்தில் 9 நீதிபதிகள்... உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று பதவியேற்பு...

உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒன்பது நீதிபதிகளும் இன்று பதவியேற்க உள்ளனர். 
முதல் முறையாக ஒரே சமயத்தில் 9 நீதிபதிகள்... உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று பதவியேற்பு...
Published on
Updated on
1 min read

உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த 9 நீதிபதிகளின் பணியிடங்களுக்கான பெயர்களை தலைமை நீதிபதி  என்.வி ரமணா தலைமையிலான கொலிஜியம் ஆகஸ்ட் 17ம் தேதி பரிந்துரைத்தது. கொலிஜியத்தின் இந்தப் பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

அதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்துக்கு 3 பெண்கள் உள்பட 9 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இந்நிலையில் 9 புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்க உள்ளனர்.

இதற்காக உச்சநீதிமன்ற இணைப்பு கட்டட வளாகத்தில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே ஒன்பது நீதிபதிகள் ஒரே சமயத்தில் பதவியேற்பது இதுவே முதன்முறையாகும்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com