இந்திய ரூபாய் மட்டுமே தாக்குப்பிடிக்கிறது...நிர்மலா சீதாராமன்!

இந்திய ரூபாய் மட்டுமே தாக்குப்பிடிக்கிறது...நிர்மலா சீதாராமன்!

அனைத்து நாட்டு நாணயங்களும் சரிவைச் சந்தித்து வந்தாலும் உலக அளவில் இந்திய ரூபாய் மட்டுமே தாக்குப் பிடித்து நிற்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்திய ரூபாய் வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் சரிந்து வரலாறு காணாத வகையில் 81 புள்ளி 9 ஆக வர்த்தகமாகி வருகிறது.

அரசு திறமையாக கையாளுகிறது

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நெருக்கடியான இந்த சூழலை மத்திய அரசு சிறப்பாக கையாண்டு வருவதாகவும்  ரூபாய் வீழ்ச்சியை சமாளிக்க இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.