நாகா தேசிய அடையாளத்தை கைவிட முடியாது...என்.எஸ்.சி.என் அறிக்கை!

நாகா தேசிய அடையாளத்தை கைவிட முடியாது...என்.எஸ்.சி.என் அறிக்கை!

நாகாலாந்து தனி நாடு கோரிக்கை கடந்த 76 ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதில் குறிப்பிடத்தகுந்த வகையில் பலம் வாய்ந்த அமைப்பாக கருதப்படுவது ஐசக்-முய்வா தலைமையிலான நாகாலிம் தேசிய சோசலிச கவுன்சில்(NSCN-IM). தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் தனி அரசே நடத்திவருகிறார்கள்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசாங்கத்திற்கும் நாகாலிம் தேசிய சோசலிச கவுன்சில் அமைப்பிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் நாகாலாந்திற்கு தனிக் கொடி மற்றும் தனி அரசியலமைப்புச் சட்டம் என்பவை உள்ளடக்கியதாக இருந்தது. ஆனால் தற்போது இந்திய ஒன்றிய அரசு இது குறித்து பேசாமல் காலம் தாழ்த்தி வருவதாக என்.எஸ்.சி.என் குற்றம் சாட்டியுள்ளது.

அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாகாலிம் தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் நாகா தேசியக் கோட்பாட்டிலிருந்து எந்த வகையிலும் விலகப் போவதில்லை என்றும், நாகாவின் தனித்துவ வரலாற்றை நிலைநிறுத்திப் பாதுகாப்பது என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில் நாகா அரசியல் தீர்வின் ஒரு பகுதியாக நாகா தேசிய சோசலிஸ்ட் கவுன்சில், நாகா தேசியக் கொடி மற்றும் தனி அரசியலமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தது. எனவே, என்.எஸ்.சி.என்., எந்த சூழ்நிலையிலும் நாகா தேசிய அடையாளத்தை குறிக்கும் இந்த முக்கிய பிரச்சினைகளை கைவிட முடியாது என அவ்வியக்கம் தெரிவித்துள்ளது.