ஒடிசா ரயில் விபத்து: இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிக்கப்பட்டது

ஒடிசா ரயில் விபத்து: இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிக்கப்பட்டது

பாலசோர்: ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்திருந்த பள்ளி இடிக்கப்பட்டது.

கடந்த 2ம் தேதியில், பாலசோரில் நடந்த 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 278 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்பு பணிகளின் போது, மீட்கப்பட்ட உயிரிழந்தவர்களின் உடல்களை, அருகில் இருந்த 65 வருடம் பழமையான, பஹனாகா அரசு உயர்நிலைப்பள்ளியில், குடும்பத்தினர் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டன. 

இறந்தவர்களின் குடும்பத்தினர், உடல்களை அடையாளம் கண்டு, திரும்பப் பெற்றுக்கொண்ட நிலையில், மீண்டும் அப்பள்ளிக்கு வந்து பயில்வதற்கு மாணவர்கள் அஞ்சுவதாக தெரிவித்துள்ளனர். அதனால், பள்ளியை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடத்திற்காக மாநில அரசின் அனுமதியை கோரியுள்ளதாகவும் பள்ளியின் தலைமை ஆசிரியை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாலசோர் ஆட்சியர் பேசுகையில், பள்ளியை பார்வையிட்டு, தலைமை ஆசிரியை, பள்ளி நிர்வாக குழு, மற்ற ஆசிரியர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடம் இது குறித்து பேசியதாகவும், அவர்கள், மாணவர்கள் பள்ளியிக்கு வர அஞ்சுவதாகவும், பள்ளியின் கட்டடத்தை இடித்து விட்டு புதியதாக கட்ட கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.