இன்னும் 145 நாட்களே உள்ளன!!!பாஜகவுக்கு காலக்கெடு வைத்த ராகுல்!!!

இன்னும் 145 நாட்களே உள்ளன!!!பாஜகவுக்கு காலக்கெடு வைத்த ராகுல்!!!

காங்கிரஸ் தனது ”இந்திய ஒற்றுமை பயணம்” மீதான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆர்எஸ்எஸ் சீருடையுடன் இணைக்கப்பட்ட காக்கி ஷார்ட்ஸின் படத்தை ட்வீட் செய்துள்ளது. 

ஆர்எஸ்எஸ்-பாஜக விமர்சனங்களுக்கு ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்கும் பழக்கம் காங்கிரஸ்ஸுக்கு எப்போதும் இருந்தது இல்லை.  இதன்பிறகு அவர்கள் தரப்பில் இருந்து ஆக்ரோஷமான விமர்சனங்கள் இருந்தால் நாங்கள் இரண்டு மடங்காக ஆக்ரோஷத்தை காட்டுவோம்" என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பதிலடி:

ராகுலின் டி-சர்ட் மற்றும் போதகருடனான சர்ச்சைக்குரிய  அவரது உரையாடல் போன்ற பிரச்சினைகளை பாஜக தொடர்ந்து எழுப்பிக் கொண்டே வந்ததால் காக்கி ஷார்ட்ஸின் படத்துடன்  'இன்னும் 145 நாட்கள்' என்று வாசகத்துடன் காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது. மேலும், "நாட்டை வெறுப்பின் தளைகளில் இருந்து விடுவிப்பதற்கும், பாஜக-ஆர்எஸ்எஸ் செய்த கேடுகளை அகற்றுவதற்கும், படிப்படியாக இலக்கை அடைவோம்" என்று அந்த ட்வீட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

பாஜக விமர்சனம்:

இந்த யாத்திரையை "இந்திய பிரிவினைக்கான பயணம்"  என்று வர்ணித்த பாஜக,இந்த பயணம் ‘பயங்கரவாததை’ ஊக்குவிப்பதாக உள்ளது என பாஜகவின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வன்முறைக்கு இடமில்லை என்று கூறி, உடனடியாக பதிவை நீக்குமாறு பத்ரா கேட்டுள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ் பதிலடி:

”வெறுப்பு, மதவெறி, பொய் மற்றும் தவறான எண்ணெங்களை பரப்புபவர்கள் விமர்சனங்களை திரும்பப் பெற தயாராக இருக்க வேண்டும்” என்று ரமேஷ் கூறியுள்ளார்.  “பிரச்சனை என்னவென்றால், காங்கிரஸின் ஆக்ரோஷமான பதில் ஆர்எஸ்எஸ்க்கு பழக்கமில்லை. அவர்கள் ஆக்ரோஷமாக இருந்தால். நாங்கள் இரண்டு மடங்கு ஆக்ரோஷமாக இருப்போம்,'' என்று கூறியுள்ளார்.

ராகுல்-இரானி விமர்சனம்:

”கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்திற்குச் செல்லாததற்கு ராகுல் கவலைப்படவில்லை” என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதைக் குறிப்பிட்ட ராகுல், "மோசடி நிறைந்த" நபரிடம் இருந்து "பொய்களை" மட்டுமே எதிர்பார்க்க முடியும் என்றும், "அவர்களுக்கு கண்ணாடி தேவைப்பட்டால் நான் ஒன்று தருகிறேன். கடந்த புதன் கிழமை இந்திய ஒற்றுமை பயணம் தொடங்குவதற்கு முன்னதாக, நினைவிடத்திற்கு சென்ற வீடியோவை காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது.” என ராகுல் தெரிவித்துள்ளார்.

"பொய்களின் தொழிற்சாலை ஓவர்டைம் வேலை செய்கிறது. பிரதமர்  தவறுதலாக கூட உண்மையைச் சொல்லாத ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்" என்றும் ராகுல் விமர்சித்துள்ளார்.

பாதிரியார் குறித்த சர்ச்சை:

கன்னியாகுமரி நடைப்பயணத்தின் போது ராகுலுடன் ஒரு போதகர் சந்தித்த சர்ச்சை குறித்து பதிலளித்த ரமேஷ், ”இயேசு கிறிஸ்து மற்றும் சக்தி பற்றி பாதிரியார் கூறியதை கட்சி ஆதரிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com