புலனாய்வு அமைப்புகள் ஏவப்படுவதாக எதிர்கட்சிகள் வழக்கு...! உச்சநீதிமன்றம் தள்ளுபடி...!!

புலனாய்வு அமைப்புகள் ஏவப்படுவதாக எதிர்கட்சிகள் வழக்கு...!    உச்சநீதிமன்றம் தள்ளுபடி...!!
Published on
Updated on
1 min read

எதிர்கட்சிகள் மீது புலனாய்வு அமைப்புகள் ஏவப்படுவதாக  தொடரப்பட்ட  வழக்கு இன்று உச்சநீதிமன்றதால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எதிர்கட்சிகள் மீது புலனாய்வு அமைப்புகள் ஏவப்படுவதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆர்.ஜே.டி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்த இந்த மனுவானது இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஜே டீ பர்திவாலா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. "அரசியல் வாதிகளுக்கு இந்த விஷயத்தில்  சிறப்புரிமைகள் வழங்கப்பட முடியாது. அவர்களும் குடிமக்களில் ஒருவரே" எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். மேலும் தனிப்பட்ட முறையில் பிரச்சினைகள் இருந்தால் தொடர்புடைய கீழமை நீதிமன்றங்களை அணுகலாம் என ஆலோசனை தெரிவித்திருக்கின்றனர்   

முன்னதாக பாஜக தன்னை எதிர்க்கும் எதிர்கட்சிகளை பழிவாங்கும் நோக்கிலும் தங்களது திட்டங்களுக்கு அரசியல் கட்சியினரை பணிய வைக்கும் நோக்கிலும் புலனாய்வு அமைப்புகளான  வருமான வரித்துறை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

ஆகையால் சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை வரையறுக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com