4 மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் கட்சி மேலிடம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்...!

4 மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் கட்சி மேலிடம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்...!

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

இமாசலப்பிரதேசம் மற்றும் கர்நாடக வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தடுத்த மாநிலத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் வரும் 24ம் தேதி தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. ராஜஸ்தானில் சொந்தக் கட்சி முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக மூத்த தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியுள்ளது காங்கிரசின் சவால்களில் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com