அடுத்தவர் மனைவியோடு உல்லாசமாக இருந்த எஸ்ஐ... மறைந்திருந்து நேரில் பார்த்த கணவன்? அப்புறம் என்ன நடந்தது?

வேறுஒருவர் மனைவியுடன் உல்லாசமாக இருந்த காவல்துறை எஸ்ஐ-க்கு தர்ம அடி வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தவர் மனைவியோடு உல்லாசமாக இருந்த எஸ்ஐ... மறைந்திருந்து நேரில் பார்த்த கணவன்? அப்புறம் என்ன நடந்தது?

தெலுங்கானா மாநிலம் வன்பர்த்தி நகர புறநகர் காவல் நிலைய எஸ். ஐ. ஷேக் சபீக்கு அதே பகுதியில் உள்ள கொத்தகோட்டையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் ரகசிய  தொடர்பு வைத்துள்ளார். இதுபற்றி அந்த பெண்ணின் கணவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் மூலம் தெரிந்து கொண்டார். இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த பெண்ணின் கணவர் வேலை விசயமாக வெளியூருக்கு செல்கிறேன் என்று கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். கிடைத்தது சந்தர்ப்பம் என்று கருதிய அவருடைய மனைவி உடனடியாக தன்னுடைய கள்ளக்காதலன் எஸ்.ஐ. ஷேக் சபீக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்தார்.


இந்த நிலையில் அருகிலேயே வேறொரு வீட்டில் மறைந்து இவற்றை கவனித்து கொண்டிருந்த பெண்ணின் கணவர் எஸ் ஐ ஷேக் சபீ தன்னுடைய வீட்டுக்குள் சென்று மனைவியுடன் உல்லாசமாக இருந்த நேரத்தில் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் சென்று கதவை தட்டி திறக்க செய்து எஸ் ஐ ஷேக் சபீயை கடுமையாக தாக்கினார்.  குறுக்கிட்ட மனைவிக்கும் தர்ம அடி விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று தர்ம அடி வாங்கி படுகாயமடைந்த எஸ்.ஐ யை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.