பிரபல நடிகர் ஷாருக்கானை சந்தித்து பேசிய பிரசாந்த் கிஷோர்.! அரசியலில் இறங்க திட்டமா?

பிரபல நடிகர் ஷாருக்கானை சந்தித்து பேசிய பிரசாந்த் கிஷோர்.! அரசியலில் இறங்க திட்டமா?

மும்பையில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஷாருக் கானை தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்,  பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் பணியிலிருந்து விலகப் போவதாகவும், இனி தனது நண்பர்கள் ஐபாக் நிறுவனத்தை நடத்துவார்கள் என்றும் தெரிவித்தார். 


இந்நிலையில், திடீரென்று மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். வரும், 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ. கவுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைக்கும் நோக்கில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக, அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு  வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் ஷாருக் கானையும்  பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து அரசியலில் இறங்கப்போகிறாரா ஷாருக் கான் என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுப்பப்பட்டு வருகிறது.