கொரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரித்து வருவது குறித்து உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
உலக நாடுகளையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ், சமீபகாலமாக கட்டுக்குள் உள்ளது. தற்போது, நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் கொரோனா தொற்றின் தற்போதயை நிலவரம் குறித்தும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் உயர்நிலைக் குழு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.