யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் வாழ்த்து...!!

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் வாழ்த்து...!!

குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றிப்பெற்ற அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இந்த ஆண்டு தேர்ச்சிப் பெற இயலாதவர்களுக்கு பிரதமர் ஆலோசனையும் கூறியுள்ளார்.

2022ம் ஆண்டிற்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் இன்று வெளியாகின.  இந்நிலையில் நாடு முழுவதும் 180 ஐ.ஏ.எஸ், 200 ஐ.பி.எஸ் உள்ளிட்ட ஆயிரத்து 22 இடங்களுக்கு நடைபெற்ற தேர்வில், 933 பேர் தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அவரது ட்விட்டர் பதிவில்,

“குடிமைப்பணிப் தேர்வுகளில் வெற்றிப்பெற்ற அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இனிதான திருப்தியுள்ள பணியை எதிர்நோக்கி இருக்கும் உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். தேசத்திற்கு சேவை செய்ய மிகவும் மகிழ்ச்சியளிக்கும் தருணமாகவும், மக்களின் வாழ்க்கையில் ஆக்கபூர்வ மாற்றத்தை கொண்டுவரும் தருணமாகவும் இது உள்ளது.” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் “குடிமைப்பணிப் தேர்வுகளில் வெற்றிப்பெற இயலாதவர்களின் ஏமாற்றத்தை நான் புரிந்துகொள்கிறேன். இதற்கு மேலும் பல முயற்சிகள் இருப்பது மட்டுமல்லாமல், உங்களின் திறன்களையும், ஆற்றலையும் வெளிப்படுத்த பல வாய்ப்புகளை இந்தியா கொண்டிருக்கிறது. உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.” எனக் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com