நாடு நான்காவது தொழிற்புரட்சியை நோக்கி பயணிக்கிறது...பிரதமர் மோடி உரை!

நாடு நான்காவது தொழிற்புரட்சியை நோக்கி பயணிக்கிறது...பிரதமர் மோடி உரை!

Published on

இந்தியா நான்காவது தொழிற்புரட்சியை நோக்கிச் செல்லும் வேளையில், இந்திய அறிவியல் துறை மற்றும் அதைச் சார்ந்தவர்களின் பங்களிப்பு மகத்தானது என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

மத்திய - மாநில அறிவியல் மாநாடு:

அகமதாபாத்தில் நடைபெறும் மத்திய - மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் அனைத்து மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். 

கூட்டு முயற்சி:

மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாநாடு சப்கா பிரயாஸ் என்று கூறப்படும்  அனைவரின் கூட்டு முயற்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றார். 

மகத்தான பங்களிப்பு:

மேலும், இந்தியா நான்காவது தொழிற்புரட்சியை நோக்கிச் செல்லும் வேளையில், அறிவியல் துறை மற்றும் அதைச் சார்ந்தவர்களின் பங்களிப்பு மகத்தானது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, நமது விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாடும்போது தான், ​​அறிவியல் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறும் என்றும் குறிப்பிட்டார்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com