பிரதமர் நரேந்திர டெல்லி மெட்ரோவின் புதிய வழித்தடம் மற்றும் சர்வதேச கண்காட்சி மையத்தை திறந்து வைத்தார்.
டெல்லி விமான நிலைய மெட்ரோ வழித்தடத்தில் துவார்கா பிரிவி 21 முதல் யாஷோ பூமி துவார்கா பிரிவு 25 நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். பின்னர், யாஷோ பூமி துவார்கா பிரிவு 25 வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது மெட்ரோவில் பயணித்த குழந்தைகள் மற்றும் பயணிகளுடன் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து, துவார்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச மாநாடு மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் பகுதியான யஷோ பூமி வளாகத்தில் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு விஸ்வகர்மா உருவத்திற்கு மலர்தூவி வணங்கினார்.
தொடர்ந்து, அங்கு அரங்குகள் அமைத்திருந்த காலனிகள் தயாரிக்கும் கைவினைஞர், தையல் கலைஞர், மண்பாண்டங்கள் செய்யும் கலைஞர்களுடன் கலந்துரையாடினார். இதன் பின்னர், யஷோபூமி கட்டிடத்தை அதிகாரப் பூர்வமாக திறந்து வைத்தார்.