புதுச்சேரியில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி!

புதுச்சேரியில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி!

ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் காவல் துறையினர் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் அதிகளவு விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகள் தலைகவசம் அணியாததால் தான் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் தலைகவசம் அணிவதின் அவசியத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 100 க்குக் மேற்பட்ட  காவலர்கள், பொது மக்கள், புதுச்சேரிக்கு வந்த சுற்றுலாவினர்கள் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அனிந்தவாரு  பேரணியாக கிழக்கு போக்குவரத்து காவல் நிலைய வாயிலில் இருந்து புறப்பட்டு, புதுச்சேரியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். 

முன்னதாக இந்த பேரணியை போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரசைத்தானியா கொடி அசைத்து  துவக்கி வைத்தார். மேலும் கார்களில் பயணிப்போர் சிட்பெல்ட் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல் துறை கண்காணிப்பாளர் மாறன் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தினார்..