மும்மொழித் திட்டமா? காங்கிரஸ் எதிர்ப்பு!

ரங்கசாமி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அரசு பணிமனை, அரசு பெட்ரோல் பங்க், ஏஎப்டி உள்ளிட்டவைகள் மூடப்பட்டு வந்துள்ளன. அதுபோல் மின்துறையும் தனியார்மயமாக்கப்பட்டு மூட வழிவகுக்கப்பட்டு வருகிறது.
மும்மொழித் திட்டமா? காங்கிரஸ் எதிர்ப்பு!
Published on
Updated on
1 min read

ஒன்றிய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் புதுச்சேரி மாநிலத்தில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். 

அரசின் நிலையைக் கூற வேண்டும் 

இது குறித்து புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இதன் மூலம் மும்மொழி திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அறிமுகப்படுத்தும் வகையில் உள்ளது. இதில் மாநில அரசின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் கட்டாயம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை கொண்டுவருதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றார். 

மின்துறை தனியார்மயமாக்க எதிர்ப்பு 

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக அரசின் தற்போதைய நிலைபாடு என்ன என்பதை பொதுமக்களிடம் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும், மின்துறையை தனியாரிடம் ஒப்புடைக்க கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்தார். மின்துறையை தனியார் மயமாக்க முயற்சி செய்தால் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றார். 

மக்களுடன் இணைந்து போராட்டம் 

மேலும் பேசிய அவர், ரங்கசாமி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அரசு பணிமனை, அரசு பெட்ரோல் பங்க், ஏஎப்டி உள்ளிட்டவைகள் மூடப்பட்டு வந்துள்ளன. அதுபோல் மின்துறையும் தனியார்மயமாக்கப்பட்டு மூட வழிவகுக்கப்பட்டு வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஆளுநரோடு சண்டை போட்டாலும் மின்துறை தனியார் மயத்தை தடுத்து நிறுத்தினோம். 

ஆனால் தற்போதைய முதல்வர் ரங்கசாமி ஆளுநரோடு இணைந்து புதுச்சேரியை வியாபாரம் செய்து வருகின்றார். மின்துறையை தனியார் மயமாக்க எதற்காக, எப்படி கொள்கை முடிவு எடுக்கப்பட்டது என்பதை அரசு விளக்க வேண்டும்.மின்துறை தனியார் மயத்தை தடுக்க மக்களுடன் இணைந்து போராடுவது, ஊழியர்களுடன் இணைந்து போராடுவது, நீதிமன்றம் செல்வது ஆகிய மூன்று வழிகள் உள்ளன. இந்த மூன்றின் மூலமாகவும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து போராடும் என்றார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com