புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
Published on: 
Updated on: 
1 min read

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகா அர்ஜூனகார்கே தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட கட்சியினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய தலைவர் தேர்வானதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு புதுவை மாநில காங்கிரஸ் கட்சி  தலைவர் சுப்ரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com