போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவ கோரிக்கை!

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவ கோரிக்கை!

டெல்லி போராட்டதில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற  வலியுறுத்தி  போராட்டம் நடைபெற்றது.

பாஜக   தலைமையிலான ஒன்றிய அரசு விவசாய சங்க தலைவர்களிடம் எழுத்துப் பூர்வமாக ஏற்று கொண்ட ஒப்பந்தத்தை உடனடியாக அமுல்படுத்த கோரியும், 2020 மின்சார மசோதாவை திரும்ப பெற வேண்டும், அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.  

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த 750 விவசாயிகளுக்கு உரிய இழப்பிடு வழங்க கோரியும், புதுச்சேரி லிங்கா ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள கூட்டுறவு சக்கரை ஆலையை அரசே திறந்து நடத்திட வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதசார்பற்ற முற்போக்கு கட்சிகளின் விவசாய பிரிவை சேர்ந்த 30 க்கும் மேற்பட்டோர் மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி பஞ்சாலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர், அப்போது தங்களின் கோரிக்கைகளை உடனடியாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நிறைவேற்றிட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்..