இந்தியாவில் தற்போது, நாட்டின் பண்முக தன்மையை ஆதரிப்போருக்கும், எதிர்த்து நிற்பவர்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பயணத்துக்கு இடையே செய்தியாளர்கள் சந்திப்பு:
கன்னியாகுமரி முதல் காஷ்மீரில் வரை வாழும் மக்களை ஒன்றிணைத்திடும் வகையில் ‘ஜோடா யாத்ரா’ என்ற நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். இந்தநிலையில் இந்திய ஒற்றுமை பயணத்தின் 3 வது நாளான இன்று நாகர்கோவிலில் இருந்து தக்கல் நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்துக்கு இடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
பாஜகவை குற்றம் சாட்டிய ராகுல்:
அப்போது பேசிய அவர், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை பாஜக தன்வசம் வைத்து கொண்டு, பிற கட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றம் சாட்டி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இந்த பேரணியானது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்யை சேர்ந்தவர்களுக்கு எதிரான பேரணி எனவும், இந்தியா பற்றி இரு வேறு நோக்கங்கள் உடையவர்கள் இடையே பல ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் எனவும் கூறினார்.
மக்கள் ஒன்றிணையவே பேரணி:
மேலும், இந்த இந்திய ஒற்றுமை பயணம் மூலம் மக்களுடன் ஒன்றிணையவே, இந்த பேரணியை நடத்துவதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.