ஆபாச படம் தயாரித்து அதனை இணைய செயலியில் பதிவேற்றி பணம் சம்பாதித்து தொடர்பாக ஷில்பா ஷெட்டி-யின் கணவர் ராஜ்குந்த்ரா மும்பை குற்றப்பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பாக ராஜ் குந்த்ரா நடத்தும் வியான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அலுவலகம் தான் ஆபாச பட தயாரிப்புக்கான மைய அலுவலகமாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதில் இயக்குனர் பொறுப்பில் இருந்து ஷில்பா ஷெட்டி திடீரென வெளியேறியிருந்தார். இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு முதல் வயான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை செபி ஆராய்ந்தது.
அதில் உள்நாட்டு வர்த்தகம் தொடர்பான செபியின் விதிமுறைகளை மீறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விதிகளை மீறியதற்காக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா-வுக்கு செபி 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.