கொரோனா நெருக்கடி சூழலிலும் அதானி குழுமம் அளவிட முடியா வளர்ச்சியை சந்தித்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
இரு தினங்களுக்கு முன்பு இந்தக் குழுமம் புதிதாக சிமென்ட் துறையில் களம் இறங்கியது.
இந்த நிலையில் அதானி குழுமத்தில் 43 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வைத்துள்ள மூன்று அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் கணக்குகளை, மத்திய நிதி அமைச்சகத்தின் தேசிய பங்குகள் பாதுகாப்பு நிறுவனம் முடக்கி வைத்துள்ளது.
3 நிறுவனங்களின் உரிமையாளர்கள் தொடர்பான விவரங்கள் முறையாக இல்லாத காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.