அரசியல் சாசன அமர்வுக்கு சிவசேனா வழக்கு மாற்றம்…தேர்தல் ஆணையத்திற்கும் தடை!

அரசியல் சாசன அமர்வுக்கு சிவசேனா வழக்கு மாற்றம்…தேர்தல் ஆணையத்திற்கும் தடை!

உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இரு சிவசேனா பிரி வினருக்கு இடையேயான மோதலை தீர்ப்பதற்காக 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு  சிவசேனா தொடர்பான வழக்கை மாற்றியுள்ளது. இந்த வழக்கு வரும் ஆகஸ்ட்-25 அன்று அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வின் அணியை  “உண்மையான சிவசேனா" கட்சியாக அங்கீகரிக்கக் கோரியும் " வில் அம்பு" சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரியும் அளீக்கப்பட்டுள்ள மனு மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இந்திய தலைமை நீதிபதி என். வி. ரமணா, நீதிபதி கிருஷ்ணா முராரி மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் குழு, முக்கிய அரசியலமைப்பு சிக்கல்களை மேற்கோள் காட்டி  ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மனுக்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.