கொரோனா தடுப்பூசியால் சரியான பக்கவாதம்..! ஜார்க்கண்டில் நடந்த அதியம்..!

ரூ.4லட்சம் செலவு செய்தும் சரியாகாத நோய், தடுப்பூசியால் சரியானதாக குடும்பத்தினர் மகிழ்ச்சி..!

கொரோனா தடுப்பூசியால் சரியான பக்கவாதம்..! ஜார்க்கண்டில் நடந்த அதியம்..!

தடுப்பூசியால் கொரோனா தான் சரியாகும் என்று பார்த்தால், ஜார்கண்டில் பக்கவாத நோயாளி ஒருவரை தடுப்பூசி குணப்படுத்தியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் 2019-ம் ஆண்டு இறுதியில் பரவ துவங்கிய கொரோனா வருடாவருடம் உருமாற்றம் அடைந்து அலை அலையாக பரவி மக்களை கொத்துகொத்தாக சாகடித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே 2 அலைகள் ஓய்ந்த நிலையில், தற்போது 3-வது அலையோடு சேர்த்து ஓமிக்ரான் என்ற புதிய கொரோனா வகையும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ்களிடம் தப்பிக்க ஒரே வழி தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான். இந்தியாவில் கிட்டத்தட்ட 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. 

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இன்றி பலர் இதனை பல முறை குத்திக் கொள்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் கொரோனாவிற்கான தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக் கொண்டு தனக்கு மூட்டு வலிசரியானதாக கூறி தொடர்ந்து 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். தகவலறிந்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தான் ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபருக்கு பக்கவாதம் குணமாகியிருப்பது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவில் உள்ள சல்காதி கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய துலர்சந்த் முண்டா என்னும் நபர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்துக்கு பிறகு நடக்க முடியாமலும், வாய் பேச முடியாமலும் போனார். கடந்த 4-ம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக வீல் சேரில் வந்தவருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு தன்னால் பேச முடிவதாகவும், தனது கால்கள் அசைவதாகவும் அவர் கூறுவதை கேட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் மிரண்டு போயினர். 

துலர்சந்த் முண்டாவின் நோய் மற்றும்அவர் குணமானது குறித்து ஆராய்ச்சி நடத்தும் போது, ​​துல்லியமான தகவல்களும் பதில்களும் வரும் நாட்களில் கிடைக்கும்" என்று பெட்டர்வார் சுகாதார மையத்தின் பொறுப்பாளர் அல்பெல் கெர்கெட்டா கூறினார். விபத்தில் சிக்கியவருக்கு 4 லட்சம் ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சை அளித்தபோதும் அவருக்கு நடைபெறாத அதிசயம் இப்போது நடந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் 
மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர்..