கோபத்தின் உச்சிக்கே சென்ற தெலுங்கானா முதல்வர்! வீடியோ வைரல்!!

தெலுங்கானாவில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கத்தரிகோல் இல்லாததால் ஆத்திரமடைந்த முதலமைச்சர்  சந்திரசேகர் ராவ் கையாலேயே ரிப்பனை பிய்த்து எரிந்ததன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிர்சில்லா தொகுதியில் மண்டேபள்ளி என்னும் பகுதியில் 80 கோடி ரூபாய் செலவில் வீடற்றோருக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தெலுங்கானா அரசு  ஆயிரத்து 320 குடியிருப்புகள் அடங்கிய குடியிருப்பு வளாகத்தை கட்டி முடித்துள்ளது. இதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது திட்டத்தை திறந்து வைக்க வந்த முதல்வர் சந்திரசேகர் ராவ் ரிப்பனை வெட்ட கத்தரிகோல் இல்லாததால் ஆத்திரமடைந்து கையாலேயே பிய்த்து எரிந்துள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் முன்கோப சுபாவம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே, அதனை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்த ரிப்பன் வெட்டும் காட்சி இணையத் தில் வைரலாகி வருகிறது. 

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com