ஜூலை 1 முதல் ஊரடங்கு ரத்து ..!

ஜூலை 1 முதல் ஊரடங்கு ரத்து ..!

தெலுங்கானாவில் ஜூலை 1 முதல் ஊரடங்கை முற்றிலுமாக விலக்கி கொள்ளவும், பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தெலுங்கானாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஜூன் 9 ம் முதல் 10 நாட்கள் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்பபடுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காலம் நேற்றுடன் முடிவடைந்தது.  இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் சந்திரசேகரராவ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் இன்று முதல் ஊரடங்கு முற்றிலும் நீக்கப்படுவதாகவும், மாநிலத்தில் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 1ம் தேதி முதல் ஊரடங்கு முற்றிலுமாக விலக்கி கொள்ளப்படும் என தெரிவித்துள்ள அம்மாநில அரசு, அனைத்து கல்வி நிறுவனங்களை திறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  
மாணவர்களை நேரடி வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள தெலுங்கானா அரசு, ஊரடங்கின்போது விதிக்கப்பட்ட அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் முழு அளவில் அகற்றும்படி அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.