ஜம்மு காஷ்மீா் - ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சாிவு..!

ஜம்மு காஷ்மீா் - ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சாிவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஜம்மு காஷ்மீா் - ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் ஷல்கிரி, பனிஹால் பகுதியில் திடீரென பயங்கர நிலச்சாிவு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல் துறையினா் வாகனங்கள் மாற்று வழியில் அனுப்பி வைத்தனா்.

மேலும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com